Saturday, October 24, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் வெள்ளச் சீரமைப்புக்கு 27,000 டாலர் மதிப்பீடு

கனடாவில் வெள்ளச் சீரமைப்புக்கு 27,000 டாலர் மதிப்பீடு

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள செயின்ட் கேத்தரினில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த வெள்ளத்தின் போது, ரிச் பாட்டெல் என்பவரது வீட்டின் அடித்தளத்தில் சுமார் எட்டு அங்குல அளவிற்கு கழிவுநீர் தேங்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அவரது காப்பீட்டு நிறுவனமான சிஏஏ பரிந்துரையின் பேரில், சேவை நிறுவனம் ஒன்று இரண்டு நாட்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டது.

ஆனால், இரண்டு நாள் பணிக்கு ஆரம்பக்கட்ட மதிப்பீடாக 27,000 டாலர் நிர்ணயிக்கப்பட்டதைக் கண்டு பாட்டெல் கடும் அதிர்ச்சியடைந்தார்.

அவரது மொத்த காப்பீட்டு உச்சவரம்பே 50,000 டாலர் மட்டுமே என்ற நிலையில், தூய்மைப் பணிக்கே இவ்வளவு பெரிய தொகை கோரப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், கழிவுநீர் கலந்த தூய்மைப் பணி என்பது உயிரியல் அபாயங்கள் நிறைந்தது என்பதால் சிறப்பு உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் தேவைப்படுவதாகவும், அதனால் செலவு அதிகம் என்றும் விளக்கமளித்தது.

பின்னர் இந்தத் தொகை 20,000 டாலராக குறைக்கப்பட்டது. இறுதியில், காப்பீட்டு நிறுவனம் தலையிட்டு முழு தூய்மைச் செலவையும் ஏற்றுக்கொண்டதுடன், வீட்டைப் புதுப்பிக்க பாட்டெல்லுக்குரிய முழு காப்பீட்டுத் தொகையையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments