Tuesday, October 20, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் நீடிப்பதா? பிரிந்து செல்வதா?

கனடாவில் நீடிப்பதா? பிரிந்து செல்வதா?

கனடாவில் தொடர்ந்து நீடிப்பதா இல்லையா என்பது குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பில் வாக்களிப்பதற்காக ஆல்பர்ட்டா மாகாண மக்கள் இன்று வாக்குச்சாவடிகளுக்குச் செல்கின்றனர்.

மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் அறிவித்த இந்த பொதுவாக்கெடுப்பில், ஏற்கனவே 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆல்பர்ட்டா மக்கள் தபால் மூலமாகவும், முன்கூட்டிய வாக்குப்பதிவு மையங்கள் மூலமாகவும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

கனடாவிலேயே தொடர்ந்து நீடிப்பதா அல்லது கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்வது குறித்து பிணைப்புக்குரிய இரண்டாவது பொதுவாக்கெடுப்பை நடத்துவதா என்பதைத் தீர்மானிக்க மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எனினும் பல மாதங்களாக நடந்த பேரணிகள், உரைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், டேனியல் ஸ்மித்தின் ‘யுனைடெட் கன்சர்வேட்டிவ் கட்சி’ இத்தகைய பிரிவினை வாக்கெடுப்பை நடத்துவது குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை.

எனினும், முன்னாள் லிபரல் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியின் கீழ் நிலவிய சூழலால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக, ஆயிரக்கணக்கான ஆல்பர்ட்டா மக்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் மனுக்களில் கையெழுத்திட்டனர்.

இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பொதுவாக்கெடுப்பு அவசியம் என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்த பொதுவாக்கெடுப்பு வாக்குச்சீட்டில் மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

அதில் பத்தாவது கேள்வியாகவே பிரிவினை குறித்த கேள்வி இடம்பெற்றுள்ளது. முதல் ஒன்பது கேள்விகள் குடியேற்றம் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments