Saturday, October 17, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் சாதனை படைத்த 90 மில்லியன் டொலர் லொட்டோ பரிசு!

கனடாவில் சாதனை படைத்த 90 மில்லியன் டொலர் லொட்டோ பரிசு!

கனடாவில் இதுவரை இல்லாத வகையில், 90 மில்லியன் டொலர் பெறுமதியான லொட்டோ மேக்ஸ் (Lotto Max) பரிசுத் தொகையை வெல்வதற்காகப் பொதுமக்கள் பெருமளவில் சீட்டுகளை வாங்கி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 85 மில்லியன் டொலர் குலுக்கலில் வெற்றிச் சீட்டு எதுவும் விற்பனையாகாத நிலையில், அடுத்த குலுக்கலுக்கான பரிசுத் தொகை 90 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, ஒன்ராறியோ மாகாணத்தின் பிக்கரிங் நகரிலுள்ள ஸ்மோக்கர்ஸ் கோர்னர் (Smokers Corner) உள்ளிட்ட கடைகளில் லொட்டோ சீட்டுகளை வாங்குவதற்காகப் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

குறித்த கடையின் உரிமையாளர் இசா ககிசா கருத்துத் தெரிவிக்கையில், வழக்கத்தைவிட அதிகமானோர் கடைக்கு வந்து லொட்டோ சீட்டுகளை வாங்குவதாகவும், சிலர் நூற்றுக்கணக்கான டொலர்களைச் செலவிடுவதாகவும் தெரிவித்தார்.

இந்தக் குலுக்கலுக்காக வாடிக்கையாளர் ஒருவர் மாத்திரம் 2,000 டொலர்களைச் செலவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த கடையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான பரிசு வென்ற சீட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வீடுகள், படகுகள், விடுமுறைக் குடில்கள் உள்ளிட்ட கனவுகளை நனவாக்கும் எதிர்பார்ப்புடன் பலர் இந்தப் பரிசை வெல்லக் காத்திருக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments