Sunday, October 18, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவின் ரிச்மண்ட் நகர மேயர் தேர்தல்: ரொப் ஹோவர்ட் வெற்றி!

கனடாவின் ரிச்மண்ட் நகர மேயர் தேர்தல்: ரொப் ஹோவர்ட் வெற்றி!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள ரிச்மண்ட் நகரின் புதிய மேயராக ரொப் ஹோவர்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

25 ஆண்டுகளாக மேயர் பதவியில் இருந்த மால்கம் ப்ரோடி பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ரொப் ஹோவர்டை ஆதரிப்பதாக ப்ரோடி அறிவித்திருந்தார்.

ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய நகரசபை உறுப்பினர் அலெக்சா லூவை விட 880 வாக்குகள் அதிகமாகப் பெற்று ஹோவர்ட் வெற்றியடைந்துள்ளார்.

மற்றொரு தற்போதைய நகரசபை உறுப்பினரான காஷ் ஹீட் 11,111 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இந்த மூன்று வேட்பாளர்களும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் லிபரல் கட்சியுடன் தொடர்புடையவர்களாவர். ரொப் ஹோவர்ட் மற்றும் காஷ் ஹீட் ஆகியோர் முன்னாள் மாகாண சட்டமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றியுள்ளதுடன், அலெக்சா லூ முன்னர் அக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டவராவார்.

நீண்டகாலமாக மேயர் பதவியில் இருந்த மால்கம் ப்ரோடி விலகியுள்ள நிலையில், ரிச்மண்ட் நகரின் நிர்வாகப் பொறுப்பை ரொப் ஹோவர்ட் ஏற்கவுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments