ஒன்ராறியோ மாகாணத்தின் ஒஷாவா நகரில் வீடற்றோர் பிரச்சினை, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மலிவு விலை வீடுகளின் பற்றாக்குறை ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதற்காக இரண்டு புதிய நகரசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வார்டு 4 தேர்தலில் ஜாக் ஓ’டொனெல் 42.2 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டெப் ஓல்ட்ஃபீல்டும் நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் மலிவு விலை வீடுகள், ஆதரவு வீட்டுவசதி மற்றும் மனநல, போதைப்பொருள் மறுவாழ்வுச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், நகரத்திற்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத நிலங்களை மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதுடன், மாகாண மற்றும் மத்திய அரசுகளிடமிருந்து நிதியுதவி பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


