இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
(11) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் மாஸ் சதாகட் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களைப் பெற்றார். சாஹிப்சாதா ஃபர்ஹான் 73 ஓட்டங்களைக் குவித்தார்.
216 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.


