Friday, October 16, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இடைத்தேர்தல் தோல்விக்கு பின் அலுவலகத்திற்கு கூட வராத சீமான் - தவிக்கும் தம்பிகள்

இடைத்தேர்தல் தோல்விக்கு பின் அலுவலகத்திற்கு கூட வராத சீமான் – தவிக்கும் தம்பிகள்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இரு தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்காத நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பிலும் சீமான் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு குறைந்தபட்சம் 10,000 வாக்குகள் கிடைக்கும் எனக் கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மதுராந்தகத்தில் 2,709 வாக்குகளும், தாராபுரத்தில் 5,268 வாக்குகளும் மட்டுமே கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இரு தொகுதிகளிலும் அக்கட்சி வைப்புத் தொகையை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவுகளைத் தொடர்ந்து சீமான் அதிருப்தியில் இருப்பதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்களுக்கும் மேலாக அவர் கட்சி அலுவலகத்துக்கு வரவில்லை என்றும் சில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கட்சி நிர்வாகிகளுடன் வழக்கமான ஆலோசனைக் கூட்டங்களையும் அவர் நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக அவருடன் கலந்துரையாடப்பட்டபோது, தற்போதைய அரசியல் சூழலில் அங்கு போட்டியிடுவது குறித்து அவர் தயக்கம் வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, கட்சி எதிர்காலத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்தும் சில நிர்வாகிகள் ஆலோசனை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்து வரும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

எனினும், சீமான், கட்சி அலுவலகத்துக்கு வராதமை, அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்த அவரது நிலைப்பாடு மற்றும் கூட்டணி தொடர்பான தகவல்கள் ஆகியவை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments