Saturday, October 17, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இசையமைப்பாளர் தேவா மறைவு - அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் விஜய்!

இசையமைப்பாளர் தேவா மறைவு – அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் விஜய்!

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடல், சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தேவாவின் இல்லத்துக்குச் சென்ற முதல்வர் விஜய்யைக் கண்டதும், அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா கதறி அழுதுள்ளார். அவரைக் கட்டியணைத்து ஆறுதல் கூறிய முதல்வர், தேவாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தேவாவின் மறைவு குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் அவரது இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் தேவா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து அவரது உடல் தியாகராய நகரில் உள்ள இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தேவாவின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம், மாங்காடு அருகே நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments