Monday, August 24, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அயல் வீட்டாரின் தாக்குதலால் மரணத்தில் முடிந்த விருந்து!

அயல் வீட்டாரின் தாக்குதலால் மரணத்தில் முடிந்த விருந்து!

கெகிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

இன்று (23) அதிகாலை இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், இச்சம்பவத்தில் கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின் போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபருடன் ஏற்பட்ட தகராறு முற்றியுள்ளது.

 

இதன்போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்தக்கொலை இடம்பெற்றுள்ளது.

 

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபரை கைது செய்வதற்காக கெகிராவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments