Saturday, August 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்க செனட்டில் அதிரடி சட்டமூலம் நிறைவேற்றம்!

அமெரிக்க செனட்டில் அதிரடி சட்டமூலம் நிறைவேற்றம்!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் அவையில் (U.S. Senate) 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச் சட்டம், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகை செய்கிறது.

 

இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டால், சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்யும் குறைந்தது ஐந்து முக்கிய நாடுகளைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேற்கத்திய தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரகசிய கடல்சார் விநியோக வலையமைப்புகளையும் இந்த சட்டமூலம் குறிவைக்கிறது.

 

செனட் சபையில் 86–11 என்ற வாக்குக் கணக்கில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

 

இது அடுத்து பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்படும். பிரதிநிதிகள் சபையின் கோடைக்கால விடுமுறை காரணமாக, அங்கு ஓகஸ்ட் மாதத்திற்குப் பிறகு (செப்டம்பர் தொடக்கத்தில்) தான் வாக்கெடுப்பு நடைபெறும்.

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளுக்குச் செல்லும் பணப்புழக்கத்தைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என அமெரிக்க அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்த நடவடிக்கையை வரவேற்று அமெரிக்க செனட் சபைக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments