கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (31) நண்பகல் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக முன்மொழியப்பட்ட புதிய சேவைச் சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துதல், MN-5 சம்பள விகிதம் தொடர்பில் நியாயமான தீர்வை வழங்குதல், உயர் தரம் மற்றும் சிறப்புத் தரத்திற்கான தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும், நிலுவையில் உள்ள பதவி உயர்வு மற்றும் தொழில் முன்னேற்றப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை பிரதிபலிக்கும் வகையில் பொருத்தமான சேவைக் கட்டமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
பிரதேச செயலகம் முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு ஒன்றுகூடிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாறு வலியுறுத்தினர்.


