Thursday, March 12, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்வெளியாகிய காணொளி - சர்ச்சையை கிளப்பிய விஜய் ஆதரவாளர்கள்!

வெளியாகிய காணொளி – சர்ச்சையை கிளப்பிய விஜய் ஆதரவாளர்கள்!

செய்தி அறிக்கையிடலின் போது, பத்திரிகையாளர் ஒருவரை ஆதரவாளர்கள் சிலர் விமர்சிப்பது போன்ற காணொளிகள் வெளியாகி சர்ச்சை கிளப்பியுள்ளது.

கடந்த சனிக்கிழமை, த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பேரணியை திருச்சியில் தொடங்கினார்.

முதல் பேரணியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்வு தொடர்பில் செய்தி சேகரிக்க திருச்சிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது ஆதரவாளர்கள்(விஜய் ரசிகர்கள்) குழுவாக தாக்குதலும் நடத்தியிருந்ததாக சில இந்திய ஊடகங்கள் மேற்கோள்காட்டுகின்றன.

அவர்கள் அவரைச் சுற்றி நடனமாடி, சைகைகளால் அவரை கேலி செய்து, அவரது செய்தித் தொகுப்பை சீர்குலைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

இதில் ஆதரவாளர் ஒருவர் பத்திரிகையாளரின் தலையில் கட்சி சின்ன சால்வையை சுற்றியிருந்தார்.

இது தொடர்பில் தமிழ்நாட்டின் சமூக ஆர்வலர் சுனந்தா தாமரைச்செல்வன் “அரசியல்மயமாக்கப்படாத ரசிகர்களின் பரிதாபகரமான நிலை” என இதனை விமர்சித்திருந்தார்.

தமிழ்நாட்டினை பொறுத்தவரை தற்போதைய இளைய சமுதாயத்தின் அடிப்படை யதார்த்தத்தை விளக்கும் இந்த காணொளி மிக சர்ச்சைக்குறியதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments