Sunday, March 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் இங்கிலாந்தில் தரையிறக்கம்!

அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் இங்கிலாந்தில் தரையிறக்கம்!

மத்திய கிழக்குப் போரின் போது ஈரானுக்கு எதிரான சில நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, பிரிட்டிஷ் தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஈரான் பிராந்தியத்தில் ஏவுகணைகளை ஏவுவதைத் தடுக்க குறிப்பிட்ட தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா இராணுவ தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சு சனிக்கிழமை (07) தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 28 அன்று ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் எந்தப் பங்கையும் வகிக்க மறுத்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை கடுமையாக விமர்சித்தார்.

பின்னர் கெய்ர் ஸ்டார்மர், இரண்டு பிரிட்டிஷ் இராணுவ தளங்களை குறிப்பிட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட தற்காப்பு நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

அதற்கு அமைவாக, மத்திய கிழக்கில் ஈரான் ஏவுகணைகளை ஏவுவதைத் தடுக்க குறிப்பிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நான்கு அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பிரித்தினியாவில் உள்ள ஒரு ரோயல் விமானப்படை தளத்தில் தரையிறங்கியதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

45 மீட்டர் (146 அடி) நீளமும் 24 க்ரூஸ் ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட B-1 லான்சர்களில் ஒன்று வெள்ளிக்கிழமை மாலையும் மூன்று சனிக்கிழமை காலையும் குளோஸ்டர்ஷையரில் உள்ள ஃபேர்ஃபோர்ட் ரோயல் விமானப்படை தளத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments