Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் மீட்பு

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.

முகமாலை வடக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டினை சுத்தம் செய்யும் போது பள்ளம் தோண்டி உள்ளார் அப் பிரதேசத்தில் ஆபத்தான நிலையில் வெடிக்காத குண்டுகள் காணப்பட்டுள்ளன உடனடியாக வீட்டு உரிமையாளர் பளை பொலிஸார்க்கு அறிவித்துள்ளனர்.

அதன் பின்னர் கிளிநொச்சி நீதி மன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடி குண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

நிருபர் – மரியசீலன் திலைக்ஸன்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments