Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்180 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மோசடி - இருவர் கைது!

180 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மோசடி – இருவர் கைது!

மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (24) காலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களை தொடங்க ஆஸ்திரேலிய முதலீட்டாளர் நிதி வழங்கியிருந்தார்.

இந்த முயற்சிகளில் நான்கு வன்பொருள் கடைகள், இரண்டு பெரிய தொன்னந்தோட்டம் , ஒரு பால் பண்ணை, ஒரு நெல் வயல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கும்.சுமார். 180 மில்லியன் பெறுமதியான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சி.ஐ.டி.யினர் இன்று குறித்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

எனினும் முக்கிய சந்தேக நபர் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.

குறித்த இரு நபர்களையும் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், முருங்கன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

(மன்னார் நிருபர்)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments