யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் 38 பழமரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.
வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு சமூக ஆர்வலர்களாலேயே அம்பன் பிரதேச வைத்தியசாலையில் 38 கொய்யா மரக் கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன.
இதில் அம்பன் பிரதேச வைத்திய சாலை வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்களான திரு.கனைச்செல்வன், திரு.சுரேஸ்குமார், சி.த.காண்டீபன், த.கார்த்தீபன், கி.விசிகரன், திரு.ஜெயகோபி மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பழமரக் கன்றுகளை நாட்டிவைத்தனர்.

நிருபர். மரியசீலன்-திலைக்ஸன்


