Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சென் பிலிப்நேரிஸ் முன்பள்ளிக்கு இராணுவத்தினர் உதவி!

சென் பிலிப்நேரிஸ் முன்பள்ளிக்கு இராணுவத்தினர் உதவி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்நேரிஸ் முன்பள்ளி மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பரிசுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு நேற்று(2)சென் பிலிப்நேரிஸ் முன்பள்ளியில் காலை 11 மணியளவில் இடம் பெற்றது

கட்டைக்காடு 522வது படை பிரிவின் படை அதிகாரி பிரிகேடியர் கருணாரத்ன ஒழுங்குபடுத்தலில் குறைத்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது

ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 1500/- ரூபா பெறுமதியான பரிசு பொருட்களாக 25,000 ரூபாய் பெறுமதியான பருசு பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு உகந்த மதிய உணவும் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்வின் விருந்தினர்களாக மருதங்கேணி 10 வது விஜயபாகு படைப்பிரிவின் தளபதி மேயர் சுது சிங்க,தாளையடி பங்குத்தந்தை ஆதர் யஸ்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர் – மரியசீலன் திலைக்ஸ்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments