சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
காற்று:
காற்று கிழக்கு முதல் வடகிழக்கு வரை வீசும். காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரை இருக்கும்.
மன்னார் முதல் புத்தளம் வழியாக கொழும்பு வரையிலும், மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
கடல் நிலை:
மன்னார் முதல் புத்தளம் வழியாக கொழும்பு வரையிலும், மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகள் அவ்வப்போது மிதமானதாக இருக்கும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகள் மிதமானதாக இருக்கும்.


