Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவிப்பு!

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவிப்பு!

கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 2ம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்கிறது என தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதுடன் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments