Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை!

பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை!

அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரித்த போதிலும், பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது.

நேற்று (09) நள்ளிரவு முதல் டீசல் விலை அதிகரித்த போதிலும், இந்த அதிகரிப்பு பேருந்து கட்டணங்களை திருத்த வேண்டிய அவசியமில்லை என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி நிலன் மிராண்டா தெரிவித்தார்.

அதன்படி, தற்போதைய கட்டணக் கட்டமைப்பு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) நேற்று (09) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் குறிப்பிடத்தக்க திருத்தத்தை அறிவித்தது.

திருத்தப்பட்ட புதிய விலைகள் பின்வருமாறு:

ஒட்டோ டீசல் – 303 ரூபா  (22 ரூபா அதிகரிப்பு)

சூப்பர் டீசல் – 353 ரூபா  (24 ரூபா அதிகரிப்பு)

ஒக்டோன் 92 பெற்றோல்– 317 ரூபா  ( 24 ரூபா அதிகரிப்பு)

95 ஒக்டேன் பெற்றோல் – 365 ரூபா (25 ரூபா அதிகரிப்பு)

மண்ணெண்ணெய்– 195 ரூபா (13 ரூபா அதிகரிப்பு)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments