Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக  இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற  தன்மையைக் கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கில் உள்ள இலங்கை குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அமைச்சு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் அங்குள்ள இலங்கையர்கள் பின்வரும் ஆலோசனைகளை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

  • நம்பகமான உள்ளூர் ஊடகங்கள் மற்றும் ஏற்பாடு செய்யும் நாட்டின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைக் கண்காணிக்கவும்.
  • அத்தியாவசியமற்ற பயணம் மற்றும் பாரியளவிலான பொதுக் கூட்டங்களைத் தவிர்க்கவும்.
  • அருகாமையிலுள்ள இலங்கை இராஜதந்திர தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்.
  • எல்லா நேரங்களிலும் கைப்பேசிகளை முழுமையாக வலுவூட்டி வைத்திருக்கவும்; செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.

தேவைப்படும் இடங்களில் உதவி வழங்க பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களும் 24 மணிநேர அவசர முழுநேர சேவை தொடர்பிலக்கங்களை செயற்பாட்டில் ஈடுத்தியுள்ளன.

இலங்கையில் உள்ள குடும்பங்கள் தங்கள் உறவுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள பின்வரும் பிரத்தியேக 24 மணி நேர அவசர தொடர்பு எண்களும் நிறுவப்பட்டுள்ளன:

  • கொன்சியூலர் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு: +94742595546
  • இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE): +94719802822
  • முழுநேர சேவைத் தொடர்பிலக்கம்: 1989

அமைச்சு தொடர்ந்து நிலையமையைக் கண்காணித்து, தேவைக்கேற்ப மேலதிக இற்றைப்படுத்தல்களை வெளியிடும் என்றும் கூறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments