Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ் மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரைக் கொலை செய்ய தானே திட்டமிட்டதாக பத்மே ஒப்புக்கொண்டார். அத்துடன் கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சியில் நேரடி தொடர்பு இல்லையெனவும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் கோரிக்கையின் பேரில் அதற்கு ஒத்துழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொக்கேய்ன், ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததாகவும், தமது கைபேசியில், “கொக்கேய்னை ஐ என்ற குறியீட்டு பெயராக பயன்படுத்தியதையும், அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், தன்னிடம் இருந்த அனைத்து துப்பாக்கிகளையும் பொலிஸார் ஏற்கனவே மீட்டுள்ளதாகவும், தற்போது தன்னிடம் இன்னும் ஒரு துப்பாக்கி மட்டுமே மீதமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments