Tuesday, March 17, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ரஜினி கடும் கண்டனம்!

ரஜினி கடும் கண்டனம்!

என்னைப்பற்றி தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது உண்மைக்கு மாறான கருத்து என்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (17) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னையில் நடந்த த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ‘திமுக மிரட்டியதால் தான் அரசியலுக்கு வரும் முடிவை ரஜினி கை விட்டார்” என கூறியிருந்தார்.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறையினர், ரஜினி ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் ரஜினி காந்த் தெரிவித்துள்ளதாவது,

தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா அண்மையில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அவருடைய அவதூறு கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments