Monday, March 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

” சுசீலா கார்க்கி அவர்கள் நேபாளத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமை, நேபாளத்தை அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கு இட்டுச்செல்லும் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்,” என்று ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments