Friday, March 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் விபத்து!

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் விபத்து!

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இன்று (24) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து திடீரென கவனக்குறைவாக வீதிக்குள் நுழைய முயன்ற முச்சக்கர வண்டி ஒன்றை மோதாமல் தவிர்க்க முயன்ற பேருந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments