Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொலை!

நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொலை!

மெக்சிக்கோ அரசாங்கத்தால் தேடப்பட்ட குற்றவாளியும் ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) குழுவின் தலைவருமான நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொல்லப்பட்டார்.

மெக்சிக்கோ பாதுகாப்பு படையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில் இவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் காவல்துறை அதிகாரியான எல்க் மென்சோவைப் பிடிக்க அமெரிக்கா 15 மில்லியன் டொலர் வெகுமதி அறிவித்திருந்ததோடு இந்த நடவடிக்கைக்கு தேவையான முக்கிய தகவல்களை வழங்கி உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கொல்லப்பட்டதையடுத்து, மெக்சிக்கோவின் 8 மாநிலங்களில் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் குழுவினர் பேருந்துகளை எரித்தும், வீதிகளை மறித்தும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து மெக்சிக்கோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பார்டோ மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments