Monday, March 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாமல் ராஜபக்ஷ மீது தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 02க்கு ஒத்திவைப்பு

நாமல் ராஜபக்ஷ மீது தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 02க்கு ஒத்திவைப்பு

க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்குத் திகதி நிர்ணயிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments