Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அரசியல் சுயலாபத்திற்காக நினைவேந்தல்களில் முண்டியடிக்கும் தமிழ் கட்சிகள்-முரளிதரன் குற்றச்சாட்டு!

அரசியல் சுயலாபத்திற்காக நினைவேந்தல்களில் முண்டியடிக்கும் தமிழ் கட்சிகள்-முரளிதரன் குற்றச்சாட்டு!

அரசியல் சுயலாபத்திற்காக நினைவேந்தல்களில் முண்டியடிக்கும் தமிழ் கட்சிகள்-முரளிதரன் குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலை புலிகளின் தியாகங்களை தற்போது தமிழ் கட்சிகள் தங்களுடைய சுயநலனுக்காக கொச்சைப்படுத்துவதாக சமூக செயற்பாட்டாளரும்,வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவருமான இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு இடத்தில் நினைவஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஜெனிவாவில் இலங்கையினுடைய வெளி விவகார அமைச்சர் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறுகின்றார்.ஆனால் இரண்டு நாட்களின் பின்பு தியாகி திலீபனின் நினைவு இடத்திற்கு அஞ்சலி செலுத்த அதே அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சர் வருகின்றார்

அவ்வாறு இருக்கும் போது அஞ்சலி செலுத்த வந்த ஒரு அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சரை இவர்கள் தடுத்து நிறுத்தியது பிழையான ஒரு விடயம் அவரை தடுத்து நிறுத்தாமல் அஞ்சலி செலுத்த விட்டு அதை ஆவணப்படுத்தி இருக்க வேண்டும்

அவரை சுதந்திரமாக அஞ்சலி செலுத்த விட்டு பின்னர் அவரிடம் பல கேள்விகளை தொடுத்திருக்க வேண்டும்

திலீபன் உண்ணாவிரதம் இருக்கும்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றான பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்

திலீபனின் இரண்டாவது கோரிக்கையாக தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் அதேபோன்று பௌத்தமயமாக்கல் தடுக்கப்பட வேண்டும்

இந்த இரண்டு விடயங்களையும் கட்டாயமாக அமைச்சரிடம் நீங்கள் கேட்டிருக்க வேண்டும்

நீங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடங்கள் கடந்து விட்டது நீங்கள் அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருக்கிறீர்கள், உங்களிடம் தான் பெரும்பான்மை இருக்கிறது, உங்களால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் தமிழரசிகள் கைதிகளை விடுவித்தல் பௌத்தமயமாக்களை தடுத்தல் இவ்வாறான செயற்பாடுகளை செய்ய முடியும்

நீங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது ஏன் இதனை நீக்கவில்லை?

தமிழர் பகுதியில பௌத்தமயமாக்கல் நிறுத்தப்படுமா?இல்லையா?

மக்களினுடைய தையிட்டி போன்ற மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்படுமா? இல்லையா?

இது போன்ற பல முக்கிய கேள்விகளை அமைச்சரிடம் கேட்டிருக்கலாம்

இவ்வாறான கேள்விகளுக்கு அமைச்சர் பதில் கூறாமல் தயங்கி நின்றால் அதன் பிறகு நீங்கள் அமைச்சரை விரட்டி இருக்கலாம்

ஆனால் எந்த ஒரு அரசியல் ராஜதந்திரமும் இல்லாமல் தமிழர் தரப்பு சுயநல அரசியலுக்காக தொடர்ந்து வரலாற்று தவறை விடுகின்றீர்கள்

ரஜீவன் எம்பி அஞ்சலி செலுத்த வரும்போதும் இவ்வாறான கேள்விகளை கேட்காமல் வரலாற்று தவறை விட்டிருக்கிறீர்கள்

ஆகவே உங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகவும் சுகபோக அரசியல் கதிரைகளுக்காகவும் தான் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கிறீர்கள் தமிழர்களுக்கோ தமிழ் சந்ததிகளுக்கோ வரலாற்றை உரிய முறையில் கடத்துவதற்கு நீங்கள் தயாராகவில்லை என்பதாகவே நான் நினைக்கிறேன்

திலீபன் நினைவுத் தூபியில் அமைச்சர் தடுக்கப்பட்டது செம்மணியில் அரசாங்க தரப்பினர் விரட்டப்பட்டது இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் வரலாற்று தவறாகவே நான் கருதுகிறேன்

ராஜீவன் எம்பி, அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர்கள் நினைவிடத்திற்கு வருவது அவர்கள் தங்களுடைய அரசியலை வளர்ப்பதற்கு என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் ஒரு அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஒரு அமைச்சரோ எம் பியோ நினைவிடத்திற்கு வருகிறார்கள் என்று சொன்னால், ராஜ தந்திரத்தோடு நாங்கள் அவர்களை அணுக வேண்டும்

தமிழர் தேசத்திற்கு அண்ணன் அன்ரன் பாலசிங்கத்திற்கு பிறகு இதுவரை ஒரு அரசியல் ராஜதந்திரி இல்லை என்றே கூற வேண்டும்.

எல்லாக் கட்சிகளும் தங்களுடைய அரசியல் சுயலாபத்திற்காகவே செயற்படுகின்றன. இது தமிழர்களுடைய நலனுக்காக இல்லை

ஆகவே சுயலாப அரசியலை தமிழ் கட்சிகள் கைவிட்டு தமிழர்களுடைய தியாகத்தை கொச்சைப்படுத்தாமல் உரிய முறையில் வரலாற்றை கடத்தும் நோக்குடன் எதிர்கால சந்ததியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைவரும் ராஜதந்திர முறையில் அரசியலை நகர்த்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments