சூடானில் துணை இராணுவப் படை, மசூதி மீது நடத்திய ட்ரோன் தாக்குதலில் 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இதனால் பல பேர் உயிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் வடக்கு டார்பூரிலுள்ள எல் ஃபாஷர் நகரில் அமைந்துள்ள மசூதியில் நேற்று (19) மக்கள் கூடியிருந்த வேளை ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.
இத் தாக்குதலின் பின்னர் மசூதியின் இடிபாடுகளுக்கு நடுவில் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.


