Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் இன்று சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என்றும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments