Tuesday, March 10, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் பொலிஸாரிடம் சரண்!

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் பொலிஸாரிடம் சரண்!

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் உட்பட, 210 நக்சல்கள் சத்தீஸ்கரில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.

நாடு முழுதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

இந்நிலையில் நக்சல் பாதிப்பு அதிகமாக இருந்த சத்தீஸ்கரின் அபுஜ்மார் மற்றும் வடக்கு பஸ்தார் ஆகிய பகுதிகள் நக்சல் இல்லாத பகுதிகளாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், பஸ்தார் மாவட்டத்தின் ஜக்தல்பூரில் பொலிஸார் மற்றும் துணை ராணுவப்படையினர் முன்னிலையில், 210 நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர்.

சரண் அடைந்த நக்சல்களில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.47 துப்பாக்கிகள் 19, தானியங்கி துப்பாக்கிகள் 17, இலகு ரக துப்பாக்கிகள் 30 உட்பட மொத்தம் 153 ஆயுதங்களையும் நக்சல்கள்பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments