Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வீதியில் கொட்டப்பட்ட மணலாள் போக்குவரத்து பாதிப்பு!

வீதியில் கொட்டப்பட்ட மணலாள் போக்குவரத்து பாதிப்பு!

பளை சோறன்பற்று பகுதியின் பிரதான வீதியில் மணல் கடத்தல்காரர்களால் கொட்டப்பட்ட மணல் அகற்றப்படாமல் காணப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 28.09.2025 நள்ளிரவு பொலிசார் வருவதை அறிந்து கடத்திச் சென்ற மணலை கடத்தல்காரர்கள் சோறன்பற்று வீதியில் கொட்டி விட்டு தப்பிச் சென்றனர்

இதனால் அதிகளவான மணல் வீதியில் சிதறுண்டு காணப்பட்டது,அவ்வீதி ஊடாக பயணம் செய்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்

குறித்த வீதியில் அதிகளவான மணல் சிதறிக் காணப்படுவதால் விபத்துக்கள் இடம்பெற அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

வீதியில் கொட்டப்பட்டுள்ள மணல் அகற்றப்படாமல் தொடர்ந்து அவ்விடத்தில் காணப்படுவதால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுவதுடன் விபத்து இடம்பெறும் நிலை தொடர்ந்து காணப்படுகின்றது.

நிருபர் – மரியசீலன்-திலைக்ஸன்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments