Monday, March 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காரைநகரில் மகேஸ்வரன் வீதி திறந்து வைப்பு!

காரைநகரில் மகேஸ்வரன் வீதி திறந்து வைப்பு!

கடந்த 2018ஆம் ஆண்டு, காரைநகர் சின்னாலடி வீதியை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் க.பாலச்சந்திரனால் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது 2022 டிசம்பர் மாதம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர் செந்தூரனின் வேண்டுகோளுக்கிணங்க அமரர் மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்று, பிரதேச சபை தவிசாளர் திரு.கிருஸ்ணன் கோவிந்தராஜ், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்,பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் வீதிக்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments