உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை லிட்டோர கேஸ் நிறுவனமும் நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,990 ரூபா.
05 கிலோ சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,602 ரூபா.
2.3 கிலோ சிலிண்டரின் விலை 56 ரூபாவினால் அதிகரிப்பு. அதன் புதிய விலை 750 ரூபா.


