பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு கடிதம்.
இன்று காலை 12 மணிக்கு மஸ்கெலியா பகுதிகளில் இருந்தும் கொட்டகலை பகுதியில் இருந்து நாட்டின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு நாளாந்தம் ஆக குறைந்தது சம்பளமாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து 2000/= பெற்று தர நீங்கள் கவணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்து மஸ்கெலியா அஞ்சலகத்திலும் கொட்டகலை அஞ்சலகத்திலும் தபால் அட்டைகள் அனுப்பி வைக்க பட்டது.
தபால் அட்டைகள் அனுப்பிய பின்னர் ஊடகங்களுக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த 202 ஆண்டுகளாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களது வேதனத்தை போராடிய பெற்று வந்து உள்ளோம் இம் முறை நாட்டின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வந்து பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து ஆக குறைந்த சம்பளமாக 2000/=பெற்று கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளனர்.



