Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கட்டைக்காட்டில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

கட்டைக்காட்டில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் யாழ் கத்தோலிக்க மருத்துவர்கள் அமைப்பினால் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடாத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை இந்த இலவச மருத்துவ முகாம் கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நடைபெற உள்ளது

நோய் உள்ளவர்கள் மற்றும் நோயற்றவர்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இலவசமாக தங்களை பரிசோதித்து ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்

இந்த இலவச மருத்துவ முகாமில்
குருதியமுக்க பரிசோதனை,
நீரிழிவு பரிசோதனை,
இதய நோய்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள்,
பெண் நோயில் மற்றும் கற்பவதிகளுக்கான ஆலோசனைகள்,
புற்று நோய் சம்பந்தமான ஆலோசனைகள்,
பற் சிகிச்சை மற்றும் பற் சீரமைப்பு தொடர்பான ஆலோசனைகள்,
கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள்,
குழந்தை மருத்துவம்,
விசேட சத்திர சிகிச்சைக்கான ஆலோசனைகள் போன்ற மருத்துவ பரிசோதனைகள் இந்த இலவச மருத்துவ முகாமின் போது நடைபெறும்

ஆகவே வடமராட்சி கிழக்கு மக்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நோய் உள்ளவர்கள் நோயற்றவர்கள் இலவசமாக தங்களை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments