Wednesday, March 11, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்கரூர் சம்பவம் - பாதிக்கப்பட்டவர்களுடன் விஜய் சந்திப்பு

கரூர் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுடன் விஜய் சந்திப்பு

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை த.வெ.க தலைவர் விஜய் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் த.வெ.க பிரசாரக் கூட்டத்தின் நெரிசலில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்டப் பிரிவினருடன் கட்சித் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரையும், கரூர் சென்று விஜய் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments