பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டமானது 109வது ஆண்டாக இம்மாறை நடைபெறவுள்ளது.
இது குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பானது நேற்றுமாலை யாழ்ப்பாண கல்லூரியில் நடைபெற்றது. ஊடக சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பலவிதமான இடையூறுகளுக்கும் மத்தியில் நாங்கள் இந்த போட்டியினை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றோம். இந்த இரண்டு பாடசாலைளும் நட்பினாலே பிணைந்திருக்கின்றார்கள்.
இந்த போட்டியானது மூன்று நாட்கள் தொடராக காணப்படுகின்றது. வியாழன், வெள்ளி மற்றும் சனி (12,13,14) ஆகிய மூன்று தினங்களாக இந்த போட்டி நடைபெறவுள்ளது. பின்னர் 50 ஓவர் போட்டி ஒன்றும், பின்னர் ரி20 போட்டி ஒன்றும் நடைபெறும்.
இந்த போட்டியை கண்டுகளிப்பதற்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற இரண்டு பாடசாலைகளின் உறவுகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். எனவே அனைவரும் இந்த போட்டியில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், நேற்றைய ஊடக சந்திப்பின்போது அணிகள் அறிமுகம், வீரர்கள் அறிமுகம் மற்றும் வீரர்களுக்கான சீருடைகள் வழங்கல் என்பன இடம்பெற்றன.



