நானுஓயா ரயில் நிலையத்தில் 13 இந்திய சுற்றுலாப் பயணிகள் குழு, கடந்த சனிக்கிழமை அன்று பாடல்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற 11001 என்ற விசேட ரயில் நேர தாமதமானதால், பயணிகள் நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது, சலிப்படையாமல், அவர்கள் நடனமாடி அந்த நேரத்தை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.
இந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் நடனமாடும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


