Sunday, March 8, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்மே.இ.தீவுகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா!

மே.இ.தீவுகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா!

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் 52 ஆவது போட்டியில் இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் இன்று மோதுகின்றன.

இந்தப் போட்டியானது இன்றிரவு 07.00 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகும்.

அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்கடிக்கப்பட்டபோது இந்தியா ஒரு பின்னடைவைச் சந்தித்தது.

ஆனால் அந்தத் தோல்வியைத் தவிர, சூர்யகுமார் யாதவின் அணி அபாரமான நடப்பு டி:20 உலகக் கிண்ணத் தொடரில் ஃபார்மில் உள்ளது.

சென்னையில் சிம்பாப்வேக்கு எதிராக அவர்கள் கடைசி போட்டியில் சாதனை படைக்கும் ஓட்ட இலக்கினைப் (256) பதிவு செய்தனர்.

இதனால், சிம்பாப்வேயை 72 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணியானது அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை உயிருடன் வைத்தது.

அதேநேரம், இன்று நடைபெறும் இறுதி சுப்பர் 8 போட்டியில் அவர்கள், ஷாய் ஹோப் தலைமையிலான அணியை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதற்கிடையில், மும்பையில் சிம்பாப்வேக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி ஆதிக்கம் செலுத்தும் வெற்றியைப் பெற்றது.

ஆனால் அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது அவர்களின் முன்னேற்றத்தில் ஒரு தடங்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிடம் தோல்வியடைந்தால் டி:20 உலகக் கிண்ணத்தில் இரண்டு முறை சம்பியனான அணி, நடப்பு தொடரிலிருந்து வெளியேற்றப்படும்.

அதனால், அவர்களுக்கும் இந்த ஆட்டானது தீர்க்கமானதாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments