Friday, March 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் மலர் வெளியீடு!

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் மலர் வெளியீடு!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 333 வது இதழ் வெளியீடு

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்று(10) காலை இடம் பெற்றது.

பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் வெளியீட்டுரையினை ஊடகவியலாளர் சி.த.காண்டீபன் நிகழ்த்தினார். மதிப்பீட்டுரையினை யாழ்ப்பாணம் கல்லூரி ஆசிரியர் துரை கணேசமூர்த்தி நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கப்பட்டன.

உதவித் திட்டங்களாக,146,550 ரூபா பெறுமதியான 03 துவிச்சக்கர வண்டிகளை கெருடாவில் தெற்கு, தொண்டை மானாறு பகுதியை சேர்ந்த,தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயத்தில் தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவி,வரியப்புலம், சுன்னாகம் பகுதியை சேர்ந்த, இணுவில் மத்திய கல்லூரியில் தரம்- 09 இல் கல்வி கற்கும் மாணவி, மூளாய் வீதி, சுழிபுரம் பகுதியை சேர்ந்த,தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஆகியோருக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள் நிர்வாகிகள், ஞானச்சுடர் வாசகர்கள் என பலரும் கலந்துகொணடு சிறப்பித்தனர்.

மரியசீலன்-திலைக்ஸ்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments