நான்கு கொலைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குறித்த சந்தேக நபர் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகமவில் முன்னாள் சிறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பொரளையில் இரண்டு இளைஞர்கள் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட நான்கு கொலைகளில் தொடர்புடையதாக அவர் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.


