Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மலையகத்தில் மூடுபனி - பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்!

மலையகத்தில் மூடுபனி – பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (16) இரவு முதல் பெய்து வரும் கனமழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்-நுவரெலியா மற்றும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிகளிலும், கிளை வீதிகளிலும் அடர்ந்த மூடுபனி நிலவுவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த வீதிகளில் வாகனம் செலுத்தும்போது, முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து, மெதுவாகவும் கவனமாகவும் வாகனங்களை இயக்குமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments