Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கடற்றொழிலாளர்களுக்கு 4 லட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள்!

கடற்றொழிலாளர்களுக்கு 4 லட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள்!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வடமராட்சி கிழக்கில் மீனவர்களுக்கு 4 லட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத்தின் கீழ் உள்ள ஆழியவளை சங்கத்தின் பயனாளிகளுக்கு சமாச தலைவர் தங்கரூபன் தலைமையில் நேற்று 05/10/2025 காலை 11 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் நிதியில் சில மாதங்களுக்கு முன்பு உடுத்துறை பகுதியில் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்ட நிலையில் ஆழியவளை மீனவர்களின் கோரிக்கைக்கு இணங்க இவ்வாறு ஆழியவளை மீனவர்களுக்கும் மீன்பிடி வலைகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments