Friday, March 13, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மத்திய கிழக்கு மோதல் – பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

மத்திய கிழக்கு மோதல் – பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு பிரெஞ்சு சிப்பாய் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (13) தெரிவித்துள்ளார்.

இது குறித்த எக்ஸ் பதிவில் அவர், ஈராக்கின் எர்பில் பகுதியில் நடந்த தாக்குதலின் போது பிரெஞ்சு ஆயுதப்படை உறுப்பினர் ஒருவர் இறந்தார் என்றும், மேலும் பல வீரர்கள் இந்த தாக்குதலின் போது காயமடைந்தனர் என்றும் கூறினார்.

எனினும், தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி கூறவில்லை.

இந்த அறிவிப்பானது நடந்து வரும் மத்திய கிழக்குப் பேரில் முதலாவது பிரெஞ்சு இராணுவ வீரரின் மரணத்தை உறுதிப்படுத்தியது.

மக்ரோனின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவு குழு ஒன்று பிரெஞ்சு விமானம் தாங்கிக் கப்பல் வந்த பின்னர், ஈராக் மற்றும் பிராந்தியத்திலுள்ள பிரான்ஸ் நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படும் என்று எச்சரித்தது.

இதனிடையே, ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் பங்கேற்ற அமெரிக்க இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று ஈராக்கின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில் ஈரான் இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் இன்று அதிகாலை கூறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments