Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மின்சார ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை!

மின்சார ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை எடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழில்துறை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த வாரம் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கையை மூன்று கட்டங்களாக நடத்த இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்கள் முடிவு செய்திருந்தன.

அதன்படி, முதல் கட்டமாக சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 4 ஆம் திகதி தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கை 11 நாட்கள் கடந்துள்ள போதிலும், அதிகாரிகள் இதுவரை தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தத் தவறிவிட்டதாக இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments