Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மருத்துவமனையில் முதியவர் உயிரிழப்பு!

மருத்துவமனையில் முதியவர் உயிரிழப்பு!

பிரித்தானியாவின் இப்ஸ்விச் (Ipswich) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர், போதிய தொடர்பாடல் குறைபாடுகள் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருந்த நிலையில் தற்போது விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.

84 வயதான டெரன்ஸ் ஃப்ரோஸ்ட் (Terrence Frost), கடந்த 2024 ஜூலை 17 அன்று சஃபோல்க் (Suffolk) பகுதியில் உள்ள இப்ஸ்விச் மருத்துவமனையில் மாரடைப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பால் (Sepsis) உயிரிழந்தார்.

இறப்பதற்கு முந்தைய நாட்களில் அவர் இரண்டு முறை அறுவை சிகிச்சை மற்றும் வயிற்று வலி காரணமாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்தார்.

ஜூலை 16 அன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவரது குடும்ப மருத்துவர் (GP) முதியவரின் இரத்தப் பரிசோதனை முடிவுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவருக்குத் தீவிரத் தொற்று (Sepsis) இருக்கலாம் எனச் சந்தேகித்த மருத்துவர், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினார்.

அவர் வருவதற்கு முன்பே மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்க அந்த மருத்துவர் 30 நிமிடங்கள் முயற்சித்தும், மருத்துவமனை தரப்பில் இருந்து எவரும் தொலைபேசி அழைப்பிற்குப் பதிலளிக்கவில்லை.

அவசர சிகிச்சைப் பிரிவைத் தொடர்பு கொள்ள எடுத்த அடுத்தடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

இந்நிலையில் கால தாமதம் காரணமாகவும் வைத்தியசாலையின் அசமந்த போக்கு காரணமாகவும் குறித்த முதியவர் உயிழந்தார்.

இந்த மரணம் குறித்து விசாரணை நடத்திய மூத்த மரண விசாரணை அதிகாரி நைஜல் பார்ஸ்லி (Nigel Parsley), எதிர்காலத்தில் இத்தகைய மரணங்களைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை தேவை என எச்சரித்துள்ளார்.

“மருத்துவமனையின் உள்வாரியான தொலைபேசி அழைப்புகளுக்கே பதிலளிக்கப்படுவதில்லை என்பது கவலையளிக்கிறது எனவும் இது போன்ற தகவல் தொடர்புச் சிக்கல்கள், தொற்று பாதிப்புள்ள மற்ற நோயாளிகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும்,” என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃப்ரோஸ்ட், சுமார் ஐந்து மணிநேரம் அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருந்த பின்னரே அனுமதிக்கப்பட்டார்.

இறுதியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையைத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments