Monday, March 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வட்டு இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்!

வட்டு இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தினமானது சர்வதேச ரீதியாக இன்றையதினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு மு.ப 10.30 மணியளவில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் ஆரம்பமானது.

இதன்போது மாணவர்களது பல்வேறு கலை நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன. அத்துடன் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம் ஒன்றும் மாணவர்களால் ஆற்றப்பட்டது. இறுதியாக “மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்காற்றுவது பெற்றோர்களா” ஆசிரியர்களா என்ற தலைப்பில் ஆசிரியர்களால் பட்டிமன்றம் ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.

இதில் கல்லூரியின் பதில் அதிபர் மயூரன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments