Tuesday, March 10, 2026
spot_img
Homeகனடா செய்திகள்புதிய முன்னுரிமை பிரிவுகளுடன் குடியேற்ற விதிகளை மாற்றியமைக்கும் கனடா

புதிய முன்னுரிமை பிரிவுகளுடன் குடியேற்ற விதிகளை மாற்றியமைக்கும் கனடா

ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் விமானப் போக்குவரத்து வரையிலான துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கும், சில இராணுவ ஆட்சேர்ப்புகளைச் சேர்ப்பதற்கும் கனடா புதன்கிழமை (19) புதிய குடியேற்ற முன்னுரிமை வகைகளை அறிமுகப்படுத்தியது.

இந்தப் புதிய பிரிவுகள், கனடாவில் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பரவலாகக் குறைத்து, திறமையான தொழிலாளர்கள் மற்றும் அறிஞர்களை ஆட்சேர்ப்பு செய்து, அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கும் கனேடியப் பிரதமர் மார்க் கார்னியின் இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன.

முக்கிய தொழில்களுக்கு தொழிலாளர்களை பணியமர்த்தும், அதே வேளையில், குடியேற்றத்தை நிலையான நிலைக்கு மீட்டெடுப்பதே இந்த மாற்றத்தின் நோக்கமாகும் என்று கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில், வீட்டுவசதி மற்றும் சமூக சேவைகளில் ஏற்படும் நெருக்கடிகளைக் குறைக்க, குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்க கனடா அரசாங்கம் முயன்று வருகிறது.

புதிய பிரிவுகளில் ஆராய்ச்சியாளர்கள், சிரேஷ்ட முகாமையாளர்கள், விமானிகள் மற்றும் விமான இயந்திர நிபுணர்கள் போன்ற போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மற்றும் கனேடிய அனுபவமுள்ள வெளிநாட்டு மருத்துவ மருத்துவர்கள் ஆகியோர் அடங்குவர்.

இராணுவ மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் விமானிகள் உட்பட கனேடிய ஆயுதப் படைகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மிகவும் திறமையான வெளிநாட்டு இராணுவ விண்ணப்பதாரர்களும் இதில் அடங்குவர்.

அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைக்கும் நோக்கில், கார்னி செவ்வாயன்று (17) ஒரு புதிய பாதுகாப்பு உத்தியை அறிவித்தார்.

இது அடுத்த தசாப்தத்தில் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அரசாங்க முதலீட்டை 85% உயர்த்துவது, பாதுகாப்புத் துறை வருவாயை 240% க்கும் அதிகமாக அதிகரிப்பது, பாதுகாப்பு ஏற்றுமதியை 50% அதிகரிப்பது மற்றும் 125,000 தரமான புதிய வேலைகளை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏனைய நேட்டோ உறுப்பினர்களைப் போலவே, கனடாவும் 2035 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக பாதுகாப்பு செலவினங்களை உயர்த்துவதாக உறுதியளித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments