Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பேருந்து மோதி விபத்து!

பேருந்து மோதி விபத்து!

அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில துரூசேவன சந்திப்பில் நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் குறைந்தது 40 பேர் காயமடைந்துள்ளதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, கரப்பிட்டியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த மற்றொரு போருந்துடன் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments